திருவாரூர் புஸ்வானம் வெடித்ததில் காயமடைந்தவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு

0 4498

பொறிப் பொறியாக தூவ வேண்டிய புஸ்வானம் அதன் இயற்கைக்கு மாறாக பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியதாக கூறப்படும் வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

திருக்கரவாசலை சேர்ந்த ஆனந்த் என்பவர், திருவாரூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக பணிபுரிந்து வருகிறார். 2021ஆம் ஆண்டு தீபாவளியின் போது இவர் பற்றி வைத்த புஸ்வானம் வெடித்து சிதறியதில் கை, கால், முகம் மற்றும் தலையில் தீக்காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து மருத்துவச் சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன் தனக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு கேட்டு நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணையம், ஆனந்துக்கு சிவகாசியை சேர்ந்த அய்யன் பட்டாசு நிறுவனம் 20 லட்ச ரூபாயும், திருவாரூரைச் சேர்ந்த பட்டாசுக் கடைக்காரர் 5 லட்ச ரூபாயும் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments