புழல் ஏரியில் 2000 கன அடி நீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சம்கொள்ள வேண்டாம் : மாவட்ட ஆட்சியர்

0 961

திருவள்ளூர் மாவட்டத்தில் பெரிய அளவில் மழை பெய்தாலும் அதனை எதிர்கொண்டு சமாளிக்க மாவட்ட நிர்வாகம் தரப்பில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் பிரபு சங்கர் கூறினார்.

புழல் ஏரியிலிருந்து 2 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் சங்கர் பிரபு அங்கு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், உபரிநீர் திறக்கப்படுவதால் பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றும் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments