சென்னையில் பெய்த கனமழையால் தாழ்வான பகுதியில் தேங்கிய மழைநீர்.. வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் சிரமமடைந்த பொதுமக்கள்..!

0 2472

சென்னையில் பெய்த கனமழையால் பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. ராயப்பேட்டை வி.பி.ராமன் சாலை, அவ்வை சண்முகம் சாலையில் வணிக நிறுவனங்கள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கியது.

கனமழை காரணமாக சென்னை பெருங்குடி திருவள்ளுவர் நகரில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் வாளிகள் மூலம் வெளியேற்றினர்.

சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் பகுதியில் தேங்கிய மழைநீரை மாநகராட்சி அதிகாரிகள் பார்வையிட்டு கால்வாய் வழியே வெளியேற்றினர்.

சென்னை தியாகராய நகரில் ஜிஎன் செட்டி சாலையில் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணியை மாநகராட்சி மேயர் பிரியா நேரில் ஆய்வு செய்தார்.

கொளத்தூர் அஞ்சுகம் நகர் பகுதியில் குடியிருப்புகளில் மழைநீர் தேங்கியதால் விடிய விடிய வெளியேற்றும் பணியில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர்.

வியாசர்பாடி கணேசபுரம் இரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments