தொண்டையில் துளையிட்டு டிரக்யோஸ்டமி சிகிச்சையா ? டிரெண்டான விஜயகாந்த் ஹேஷ்டாக்..! பழைய கேப்டனாக திரும்பி வர வேண்டுதல்

0 7804

உடல் நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தொடர் இருமல் காரணமாக மூச்சுத்தின்றல் ஏற்பட்டதால் அவருக்கு தொண்டையில் துளையிடப்பட்டதாக வெளியான தகவலை மியாட் மருத்துவமனை மறுத்துள்ளது. இதற்கிடையே அவர் குணமாக வேண்டி எக்ஸ் தளத்தில் ஏராளமானோர் கருத்து பதிவிட்டதால் விஜயகாந்த் என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறை காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சைக்கு பின்னர் சகஜ நிலைக்கு திரும்பியதாக தெரிவித்த மியாட் மருத்துவமனை அவர் சில நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பிற்கு பின்னர் வீடு திரும்புவார் என்று தெரிவித்தது. இந்த நிலையில் புதன்கிழமை காலையில் விஜயகாந்தின் உடல் நிலை சீரான நிலையில் இல்லாததால் அவருக்கு நுரையீரல்சிகிச்சைக்கான உதவி தேவைப்படுவதாகவும், விரைவில் பூரண குணமடைவார் என்று நம்புவதாகவும் இன்னும் 14 நாட்கள் சிகிச்சையில் இருக்க வேண்டும் என்றும் மியாட் மருத்துவமனை அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மாலையில் தொடர் இருமல் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் விஜயகாந்துக்கு தொண்டையில் துளையிட்டு டிரக்யோஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டுவதாக தகவல் வெளியானது. இது விஜயகாந்தின் ஆதரவாளர்களை கலக்கமடைய செய்தது. இந்த நிலையில் தொண்டையில் துளையிடப்பட்டதாக வெளியான தகவலை மறுத்துள்ள மியாட் மருத்துவமனை நிர்வாகம், மூச்சுவிட சிரமப்பட்டதால் அவருக்கு, கூடுதல் ஆக்ஸிசன் குழாய் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக தெரிவித்ததோடு, அவருக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

இந்த தகவலை அறிந்து விஜயகாந்த் குணமடைய வேண்டி எக்ஸ் தளத்தில் ஏராளமானோர் தங்கள் கருத்துக்களை பதிவிட்டனர். கடந்த காலங்களில் சினிமாவில் விஜயகாந்த் பேசிய அதிரடி வசனங்களுடன் கூடிய வீடியோக்களையும் நினைவு கூர்ந்து பகிர்ந்து வருகின்றனர்

இதனால் எக்ஸ் தளத்தில் விஜயகாந்த் என்ற ஹேஷ் டாக் இந்திய அளவில் முதலிடம் பிடித்தது. பழைய விஜயகாந்தாக நலம் பெற்று இல்லம் திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments