தெலங்கானாவில் 119 சட்டமன்ற தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு... மொத்த வாக்காளர்கள் 3.26 கோடி; 35,655 வாக்குப்பதிவு மையங்கள்
தெலங்கானாவில், மொத்தமுள்ள 119 தொகுதிகளில் வியாழனன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அம்மாநிலத்தில் 3 கோடியே 26 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்களாக உள்ள நிலையில், 35 ஆயிரத்து 655 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
106 தொகுதிகளில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. மாவோயிஸ்டு ஆதிக்கமுள்ள 13 தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிக்கு நிறைவு பெற உள்ளது.
தேர்தலுக்காக பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள், வாக்குப்பதிவுக்கு தேவையான ஆவணங்களை பெற்றுக் கொண்டு வாக்குப்பதிவு மையங்களுக்கு சென்றுள்ளனர்.
இந்த தேர்தலில், ஆளும் பாரத ராஷ்டிரிய சமீதி, காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்தத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள், டிசம்பர் 3ஆம் தேதி எண்ணப்பட உள்ளன.
Comments