பனாமாவில் சுரங்க பணிகளுக்காக வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்
மத்திய அமெரிக்க நாடான பனாமாவில், சுரங்கப்பணிகள் மேற்கொள்ள கனடா நாட்டு நிறுவனத்திற்கு தடை விதிக்கப்பட்டதை மக்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
ஆண்டுக்கு 3,000 கோடி ரூபாய் வீதம் செலுத்திவிட்டு 20 ஆண்டுகள் தாமிர சுரங்கப்பணிகளை மேற்கொள்ள, ஃபர்ஸ்ட் குவாண்டம் என்ற கனடா நாட்டு நிறுவனத்துக்கு பனாமா அரசு அனுமதி வழங்கியிருந்தது.
சுற்றுச்சூழல் பாதிப்புகளை கருத்தில் கொள்ளாமல் அரசு தாராள மனப்பான்மையுடன் சலுகைகளை வழங்கியுள்ளதாக கூறி நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. சுரங்க நிறுவனத்துடன் அரசு மேற்கொண்ட ஒப்பந்தம் அரசியல் அமைப்பிற்கு எதிரானது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது.
Comments