ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டுள்ளாக நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

0 2176

தெற்காசியாவிலேயே முதன்முறையாக இரவு நேரத்தில் சென்னையில் வரும் 9, 10-ஆம் தேதிகளில் நடைபெற உள்ள ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களுக்கு எந்தச் சிரமும் ஏற்படாது என்றும் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

பந்தயத்தை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள தீவுத்திடலைச் சுற்றியுள்ள சாலையில் பன்னோக்கு மருத்துவமனை, ராணுவத் தலைமையிடம் ஆகியவை உள்ளதாகவும், 250 கிலோ மீட்டர் வேகத்தில் கார்கள் செல்லும்போது ஒலி மாசு ஏற்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் பாதிக்கப்படுவர் என்றும் கூறி பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பந்தயத்தை நடத்த ராணுவ அதிகாரிகளிடம் அனுமதி பெறப்படவில்லை என்று கூறியுள்ள மனுதாரர், போட்டியை இருங்காட்டுக்கோட்டைக்கு மாற்ற உத்தரவிடுமாறும் கோரியுள்ளார்.

இதற்கு தமிழக அரசு அளித்துள்ள விளக்கத்தில், குறிப்பிட்ட இடத்தில் பந்தயத்தை நடத்தும் போது சாமான்ய மக்களும் கார் பந்தயத்தை காண வாய்ப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்ற பந்தயம் ஏற்கனவே நொய்டா, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டுள்ளதாகவும், பந்தயத்தை நடத்துவதால் சர்வதேச அளவிலான வர்த்தகம் நடைபெறும் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து அனுமதி ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி மகாதேவன் தலைமையிலான அமர்வு, தீர்ப்பை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments