தென்காசி ஐயப்ப பக்தர்கள் வந்த மினி பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து 5 பேர் காயம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே மினி பேருந்தும், காரும் நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளானதில் ஐயப்ப பக்தர்கள் 5 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
நாமக்கல்லைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு, பின்னர் அங்கிருந்து சென்று குற்றாலத்தில் குளித்துவிட்டு மினிபேருந்தில் ஊருக்கு திரும்பியுள்ளனர்.
அப்போது சிங்கிலிபட்டி- சொக்கம்பட்டி நடுவே தேசிய நெடுஞ்சாலையில் எதிரே வந்த கார் பக்தர்கள் வந்த மினி பேருந்தின் மீது மோதியதில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Comments