மகளிர் உரிமைத் தொகைக்காக போட்டோ எடுக்க நகையை கழற்றச்சொல்லி கைவரிசை... அரசு அதிகாரிகள் போல் நடித்தவர்கள் கைது

0 1118

உளுந்தூர்பேட்டை அருகே மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதது குறித்து விசாரணை நடத்த வந்த அரசு அதிகாரிகள் போல் நடித்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

எறையூரை சேர்ந்த சரோஜா என்பவரின் வீட்டிற்கு வந்த இருவர், உரிமைத் தொகைக்காக போட்டோ எடுப்பதற்காக நகைகளை கழற்றி வைக்குமாறு கூறி, அவரின் கவனத்தை திசைத்திருப்பி நகைகளுடன் தப்பியுள்ளனர்.

இதுகுறித்து சரோஜா அளித்த புகாரின்பேரில், கைவரிசை காட்டியவர்களின் இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை கொண்டு எலவனாசூர்கோட்டை போலீசார் நடத்திய விசாரணையில், சரவணன், ஷாஜகான் ஆகியோர் சிக்கினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments