பெரம்பலூர் பல துறைகளில் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதில் உறுதி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பல துறைகளில் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் எறையூர் சிப்காட் தொழில் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள JR1 என்ற காலணி உற்பத்தி தொழிற்சாலையை சென்னையிலிருந்து காணொலி வாயிலாக திறந்து வைத்துப் பேசிய அவர், 400 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஆலை மூலம் நான்காயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
2030ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார மாநிலம் என்னும் இலக்கை அடைவது வெகு தொலைவில் இல்லை என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்.
Comments