கட்சிக்காரன்னா 500 ரூபாய் மத்தவங்களுக்கு 250 ரூபாய் பரம்பரை காங்கிரஸ்காரன்னா சும்மாவா..?! குஷ்புவுக்கு எதிராக விளம்பர போராட்டம்?
சென்னையில் குஷ்புவுக்கு எதிராக போராட அழைத்து வரப்பட்ட பெண்களை கைது செய்து போலீசார் வேனில் ஏற்றிய நிலையில் வீட்டில் வேலை கிடப்பதாக கூறி பெண்கள் போலீஸ் வேனில் இருந்து இறங்கி ஓடினர்.
நான் எல்லாம் பரம்பரை காங்கிரஸ் எனக்கு 500 ரூபாய் கொடுப்பாங்க என பெருமிதத்துடன் சொல்லும் இவர் குஷ்புவுக்கு எதிராக போராடுவதற்காக கையில் கொடி ஏந்தி வந்த இளைஞர்..!
சேரி மொழி என்று நடிகை குஷ்பூ வலைதளத்தில் பதிவு செய்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறி சென்னை பட்டினப்பாக்கம் லீத் கேஸ்டில் வடக்கு தெருவில் உள்ள நடிகை குஷ்புவின் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தபோவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி பிரிவு சாப்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
குஷ்புவின் இல்லத்திற்கு முன்பு போராட்டம் நடத்த காவல்துறையினர் அனுமதி வழங்காத நிலையில் இரண்டு தெரு முன்பாக மாதா சர்ச் சாலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினர் கையில் கொடியேந்தி போராட்டம் நடத்தினர். குஷ்பு ஒழிக என்று வாசகம் இடம் பெற்ற போராட்ட பதாகையில் ஆண் ஒருவரின் புகைபடம் இடம் பெற்றிருந்தது.
அந்த நபர் யார் ? என்று விசாரித்த போது அவர்தான் போராட்டத்தை நடத்த ஆட்களை அழைத்து வந்துள்ள காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன்குமார் என்று தெரிவித்தனர்
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குஷ்புவின் கட் அவுட்டுக்கு மாட்டு சாணம் பூசியும், துடைப்பத்தால் அடித்தும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
மாட்டுச்சானத்தை கையால் தொட்ட பெண் ஒருவர் முகத்தை சுளித்தபடியே கூட்டத்தில் இருந்து வெளியேறினார்
கையில் கொடியேந்தி வந்திருந்த தொண்டர் ஒருவர் கூறும் போது கட்சிகாரங்களுக்கு 500 ரூபாய்,மத்தவங்களுக்கு 250 ரூபாய் கொடுப்பாங்க. நான் எல்லாம் பரம்பரை காங்கிரஸ் எனக்கு 500 ரூபாய் கொடுப்பாங்க என பெருமிதம் தெரிவித்தார்
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு காவல்துறை வாகனத்தில் ஏற்றப்பட்டனர். தாமதமாக வந்தவர்களை ஏன் எல்லாம் லேட் ஆயிடுச்சு ? வாங்க உடனே வந்து வண்டியில் ஏருங்க என்று எல்லாரையும் போராட்ட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர் அந்த பெண்களை காவல்துறை வாகனத்தில் ஏற்றி விட்டார்.
காவல்துறை வாகனத்தில் ஏறிய பெண்கள் கைது செய்து மண்டபத்தில் வைத்திருந்தால் மாலை 6:00 மணிக்கு தான் விடுவார்கள் என்றும் வீட்டில் நிறைய வேலை உள்ளது என ஓடும் பேருந்தில் இருந்து காவலருடன் வாக்குவாதம் செய்து இறங்கி ஓட தொடங்கினர்
தனக்கு எதிராக காங்கிரஸ் நடத்தியுள்ள போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள குஷ்பு, தமிழக காங்கிரஸில் மொத்தமே 20 பேர் தான் இருப்பதாகவும், தங்களுடைய விளம்பரத்துக்காக போராட்டம் நடத்துவதாகவும், தான் தவறு செய்யவில்லை அதனால் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று தெரிவித்தார்
Comments