மதுரை பெருங்குடி பகுதியில் திடீரென ஊர் புகுந்து சிறுவன் உட்பட ஐந்து பேரை வெட்டிய மர்ம நபர்கள் போலீசார் விசாரணை

0 2788

மதுரை அவனியாபுரம் அருகே சாலையோரம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த இளைஞர்கள் 3 பேரை மர்ம நபர்கள் கத்தியால் குத்திவிட்டு ஓடிய நிலையில், அவ்வழியாக எதேச்சையாக வந்த 2 பேரை கத்திக் குத்து பட்ட இளைஞர்களின் ஆட்கள் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெருங்குடி கிராமத்தில் ஊர் மையப் பகுதியில் அமர்ந்து கணபதி, விஜய் குட்டி, அஜித் ஆகியோர் பேசிக் கொண்டிருந்த போது அங்கு பைக்கில் வந்த 2 பேர், யார் பெயரையும் குறிப்பிடாமல், அவன் எங்கே இருக்கிறான் என்று கேட்டதாக கூறப்படுகிறது.

யாரை கேட்கிறீர்கள் என்று அந்த இளைஞர்கள் விசாரித்துக் கொண்டிருந்த போதே திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பைக்கில் வந்தவர்கள் சரமாரியாக குத்தி விட்டு, தப்பிச் சென்றதாக தெரிகிறது.

இளைஞர்களின் அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் கட்டை, அரிவாளுடன் ஊர் மையப் பகுதியில் திரண்டனர்.

அதே நேரத்தில், பக்கத்து ஊரைச் சேர்ந்த ஒருவர், உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது 13 வயது மகனை பைக்கில் அவ்வழியாக அழைத்துச் சென்றதாக தெரிகிறது.

இளைஞர்களை தாக்கியது அந்த இருவராக இருக்கலாம் என்று சந்தேகப்பட்ட கிராம மக்கள், தந்தையையும் மகனையும் வழிமறித்து வெட்டியதாக கூறப்படுகிறது.

காயமடைந்த 5 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments