சென்னை வேளச்சேரியில் 3 வயது குழந்தை தலையில் காயம் பள்ளி நிர்வாகத்திற்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன்

0 2456

சென்னை வேளச்சேரியில் தனியார்  பள்ளியில் எல்கேஜி பயிலும்  3 வயது குழந்தை காயமடைந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகத்தினர் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

வேளச்சேரி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் இயங்கி வரும் உதயம் குளோபல் பள்ளியில் எல்.கே.ஜி.படித்து வருபவர் அருண், சுகன்யா தம்பதியின் 3 வயது குழந்தை கிருஷிகா.

பள்ளிக்கு சென்ற குழந்தையை பிற்பகல் 2.30 மணியளவில் வீட்டிற்கு அழைத்து வர குழந்தையின் உறவினர் பள்ளிக்கு சென்றுள்ளார்.அப்போது குழந்தை  தலையில்  ரத்தக் காயத்துடன் அழுதபடி இருந்ததாகக்  கூறப்படுகிறது.

இதனைக் கண்ட குழந்தையின் உறவினர் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்ட போது சரிவர பதிலளிக்காததுடன்  குழந்தைக்கு அடிபட்டதே தெரியாது எனவும் இந்தத் தகவலை பெற்றோருக்கும் சொல்லாமல் மறைத்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments