அறை எண் 304ல் கல்லூரி மாணவன் போதை ஊசி விபரீதம்..! கல்லூரியில் விற்கப்படுவதாக புகார்

0 2941
அறை எண் 304ல் கல்லூரி மாணவன் போதை ஊசி விபரீதம்..! கல்லூரியில் விற்கப்படுவதாக புகார்

சென்னையில் நண்பரின் பிறந்த நாள் கொண்டாட்டம் என்று லாட்ஜில் அறை எடுத்து தங்கி ஊசி மூலம் போதை ஏற்றிக் கொண்ட கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கல்லூரிக்கு சென்ற இடத்தில் போதைக்கு அடிமையான மகன் பலியானதால், ஆற்றாமையால் பெற்ற தாயின் ஆதங்க காட்சிகள் தான் இவை..!

சென்னை புளியந்தோப்பை சேர்ந்த நாகம்மாள் என்பவரின் மகன் ராகுல். 19 வயதான ராகுல் சூளையில் உள்ள செங்கல்ராயன் கல்லூரியில் பி.ஏ வரலாறு இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த 25 ந்தேதி இரவு 12 மணி அளவில் நண்பர் ஆகாஷ் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக அண்ணாசாலையில் உள்ள ஆர்ச்சிட் இன் என்ற விடுதியில் அறை எண் 304 ல் தங்கினர்.

இந்த நிலையில் 26 ந்தேதி காலை 8 மணிக்கு வலிப்பு வந்து மயங்கி விழுந்த மாணவர் ராகுலை நண்பர்களுடன் சேர்ந்து விடுதி நிர்வாகம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி ராகுல் பரிதாபமாக பலியானார். அவருடன் அறையில் தங்கி இருந்த ஆகாஷ், சஞ்சய், மணிகண்டன் உள்ளிட்டோரிடம் நடத்திய விசாரணையில் விடுதி அறையில் விடிய விடிய நடந்த விபரீத போதை பார்ட்டி வெளிச்சத்துக்கு வந்தது.

போதை மாத்திரையை பொடியாக்கி அதனை நீரில் கலக்கி உடலில் ஏற்றிக் கொண்டபோது ராகுல் வலிப்பு வந்து மயங்கி பலியானது தெரியவந்தது.

மகனின் மரணச்செய்தி அறிந்து கண்ணீர் விட்டு கதறிய மாணவனின் சித்தி, போதையால் தங்கள் பிள்ளைய வாரிக் கொடுத்துடு நிற்பதாக வேதனை தெரிவித்தார்.

கல்லூரியிலேயே தடையின்றி போதை பொருட்கள் விற்பதாகவும், அதனை தடுக்க எவரும் முன்வருவதில்லை என்றும் உறவினர்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.

சின்ன பசங்க தான் போதைக்கு அடிமையாகி திரிவதாகவும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்த வேண்டும் என்றும் இத்தோடு போதை சாவு நடக்காமல் தடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

பலியான ராகுலின் உடலில் காயங்கள் இல்லை எனவும் அதிகளவிலான போதை பொருளை பயன்படுத்தியதால் உயிர் இழப்பு ஏற்பட்டதாக பிரேதப்பரிசோதனை முதல் கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. இதற்கிடையே மாணவர்களின் கைகளுக்கு போதை மாத்திரை போதை பவுடரை கொடுத்தது யார் ? என்று போலீசார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments