"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
அமெரிக்காவின் வெர்மாண்ட் பல்கலைக்கழகத்தில் படித்துவரும் பாலஸ்தீன வம்சாவளி மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியவரை கைது செய்த போலீஸ்
அமெரிக்காவின் வெர்மாண்ட் பல்கலைக்கழகத்தில் படித்துவரும் பாலஸ்தீன வம்சாவளி மாணவர்கள் 3 பேரை துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
அரபி மொழியில் பேசியபடி இரவு உணவு அருந்த சாலையில் நடந்து சென்றபோது அங்கிருந்த வீடு ஒன்றிலிருந்து வெளியே வந்த ஜேஸன் ஈட்டன் என்பவர் அவர்களை கைத்துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடினார். தகவலறிந்து வந்த போலீசார் காயமடைந்த மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்களில் ஒருவர் கவலைக்கிடமாக உள்ள நிலையில், ஜேஸன் ஈட்டனை கைது செய்த போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். பாலஸ்தீன வெறுப்பால் துப்பாக்கி சூடு நடந்திருக்கலாம் என பர்லிங்டன் மேயர் தெரிவித்தார்.
Comments