உத்தர்காசி சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்க எலித் துளை தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டம்..!
உத்தர்காசி சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்க எலித் துளை தொழில்நுட்பம் என்ற பழைய முறையை பயன்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதன்படி, மெட்றாஸ் சாப்பர்ஸ் எனப்படும் ராணுவ பொறியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அடங்கிய 6 பேர் குழு இடிபாடுகள் ஏற்பட்டுள்ள இடத்திற்கு சென்றுள்ளனர்.
அவர்கள் இதற்காக டிரில்லிங் எந்திரம், சுத்தியல், மண்வெட்டி, அரம், ஆக்ஸிஜன் கருவி போன்றவற்றை எடுத்துக் கொண்டு, அங்கு ஏற்கனவே இடிபாடுகளுக்கு நடுவே செலுத்தப்பட்டுள்ள 800 மில்லி மீட்டர் விட்டமுள்ள குழாய்களுக்குள் ஊர்ந்து சென்று இடிபாடுகளை கைகளினால் அகற்ற உள்ளனர்.
இக்குழுவினர் குறுகலான பாதைகளில் ஊர்ந்து சென்று பல மணி நேரம் அங்கேயே இருந்தபடி துளையிடுவதில் நிபுணத்துவம் பெற்றவர்கள் என்பதால், இம்முறை மீட்புப் பணிகளில் நிச்சயம் பலன் கிடைக்கும் என்றும், மீட்புப் பணிகள் முடிய குறைந்தபட்சம் 10 நாட்கள் ஆகும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
Comments