மாமன்னன் படத்தின் உதவி இயக்குநர் மாரிமுத்து மூச்சுத்திணறலால் 30 வயதில் உயிரிழப்பு..!
30 வயதில் உயிரிழந்த மாமன்னன் படத்தின் உதவி இயக்குநர் மாரிமுத்துவுக்கு அளவுக்கு அதிகமாக சிகெரட் பிடித்ததால் மூச்சித்திணறல் பிரச்சினை ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தனது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் திருப்புளியங்குடி கிராமத்தில் இருந்த அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, நெல்லை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் மாரிமுத்து உயிரிழந்தார்.
அளவுக்கு அதிகமான சிகரெட் பிடிக்கும் பழக்கத்தால் மாரிமுத்துவுக்கு மூச்சித்திணறல் ஏற்பட்டதாகவும், அதனால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் இறந்திருக்கலாம் எனவும் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கர்ணன் படத்தில் நடிகராக அறிமுகமாகி உதவி இயக்குனராக பணி புரிந்து வந்த மாரிமுத்து, தனியாக கதை எழுதி படம் எடுக்க திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
Comments