இஸ்ரேலியருக்கு சொந்தமான 20 ஆயிரம் டன் பாஸ்போரிக் அமிலம் ஏற்றிச் சென்ற கப்பல் கடத்தல்
இஸ்ரேலியருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் ரசாயனக் கப்பல் ஒன்று கடத்தப்பட்டுள்ளது.
சென்ட்ரல் பார்க் என்ற பெயர் கொண்ட அந்தக் கப்பல், சர்வதேச கப்பல் மேலாண்மை நிறுவனமான சோடியாக் மரைடைம் மூலமாக நிர்வகிக்கப்படும் இந்தக் கப்பல் சுமார் 20 ஆயிரம் டன் பாஸ்போரிக் அமிலத்தை ஏற்றிச் சென்றதாகத் தெரிகிறது.
இந்நிலையில் ஏடன் வளைகுடா வழியாகச் சென்ற இந்தக் கப்பல் அடையாளம் தெரியாத ஆயுதம் ஏந்தியவர்களால் கடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தக் கப்பலில் கொண்டு செல்லப்பட்ட பாஸ்போரிக் அமிலம் உரங்கள் தயாரிக்கப் பயன்படும் என்றும், கப்பலில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பணியாளர்கள் இருந்தாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
Comments