கட்டணமில்லா பேருந்துகளில் பயணிகள் பெண்களிடம் விவரம் சேகரிப்பு.? இபிஎஸ் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பதில்

0 2079

சில மாவட்டங்களில், கட்டணமில்லா பேருந்துகளில், பெண் பயணிகளிடம், பெயர், மொபைல் எண், வயது, சாதி உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்படுவதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்த குற்றச்சாட்டுக்கு, போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பதில் அளித்துள்ளார்.

அதில், ஒரு அரசு, சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தும் போது, அந்தத் திட்டம் மக்களுக்கு எந்த அளவிற்கு பலனளிக்கிறது என்று ஆராய்ந்து அதை இன்னும் செம்மைப் படுத்த முனைவது மக்கள் நல அரசின் கடமை என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில் நடைபெற்ற ஆய்வின் முடிவில், விடியல் பயணம் மூலமாக சராசரியாக ஒவ்வொரு மகளிருக்கும் 88 ரூபாய், பேருந்து கட்டணமாக செலவிட்டது மிச்சமாகிறது என்பது தெரிய வந்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

அதன் அடுத்தக்கட்ட ஆய்வு தான் தற்போது நடந்து வருவதாகவும், திட்டத்தின் கீழ் பயனடைவோர் யார் என்பதை அறிந்து அதனை இன்னும் கூர்மைப்படுத்துவது தான் நோக்கம் என்றும் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments