சென்னையில் விடிய, விடிய மழை - இன்றும் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

0 1366

தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமானது வரையில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் நேற்று நாள் முழுவதும், விட்டு,விட்டு மழை பெய்தது. விடிய, விடிய மழை தொடர்ந்த நிலையில், இன்றும் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக, வானிலை மையம் கூறியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments