உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க செங்குத்தாக துளையிடும் பணிகள் தொடக்கம்
உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க மலையின் மேல்பகுதியில் இருந்து செங்குத்தாகத் துளையிடும் பணிகள் 2ஆம் நாளாக நடந்து வருகின்றன.
இரண்டு வாரங்களாக சுரங்கத்தினுள் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை மீட்க கிடைமட்டமாகத் துளையிடும் பணிகள் நடந்து வந்தன. இதற்கான செயல்பட்டு வந்த ஆகர் என்ற இயந்திரம் பழுதாகி உடைந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து செங்குத்தாகத் துளையிடும் பணிகள் நடந்து வருவதாகக் கூறியுள்ள அதிகாரிகள், இதுவரை 15 மீட்டர் ஆழத்திற்கு துளையிடப்பட்டுள்ளதாகவும், பெரிய தடைகள் ஏதும் இல்லை என்றால் 4 நாட்களில் சுரங்கத்தை அடைய முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.
இதனிடையே சுரங்கத்தில் சிக்கியுள்ள ஆகர் இயந்திரத்தின் சில பகுதிகள் பிளாஸ்மா மற்றும் லேசர் கட்டர்கள் மூலம் அகற்றப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் சாப்பர்ஸ் என்ற பொறியாளர் அணியும் மீட்புப் பணியில் கைகோர்த்துள்ளது.
Comments