2ஆவது டி-20 போட்டியில் இந்தியா அபார வெற்றி - 44 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது

0 4067
2ஆவது டி-20 போட்டியில் இந்தியா அபார வெற்றி - 44 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் குவித்தது. இந்திய தரப்பில் ஜெய்ஸ்வால் 53 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 58 ரன்களும், இஷான் கிஷான் 52 ரன்களும் எடுத்தனர். பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது.

இதன் மூலம் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி தற்போது 2க்கு பூஜ்யம் என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments