காதலர்கள் போல பழகிய இளைஞர்கள் தன்னை விட்டு விலகி, பெண்களை திருமணம் செய்ய முடிவெடுத்ததால் கொலை செய்ததாக நாட்டு வைத்தியர் வாக்குமூலம்

0 3488

காதலர்கள் போல தன்னுடன் பழகிய இளைஞர்கள் 2 பேரும் தன்னை விட்டு விலகி, பெண்களை திருமணம் செய்ய முடிவெடுத்ததால் தான் அவர்களை கொன்று புதைத்ததாக கும்பகோணம் நாட்டு வைத்தியர் வாக்குமூலம் அளித்துள்ளதாக தஞ்சாவூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சோழபுரம் பகுதியைச் சேர்ந்த அசோக் ராஜ், முகமது அனாஸ் ஆகியோர் காணாமல் போன வழக்கில், இருவரிடமும் நெருங்கிப் பழகிய நாட்டு வைத்தியர் கேசவமூர்த்தியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது, 3 பேரும் தன்பாலின ஈர்ப்பாளர்களாக இருந்ததாகவும், ஒரு கட்டத்தில் இருவரும் தங்களது உறவுக்கார பெண்களை திருமணம் செய்துக் கொள்ள முடிவெடுத்ததால் தனித்தனியாக கொலை செய்து உடல் பாகங்களை பல்வேறு இடங்களில் பிரித்துப் புதைத்தாகவும் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறியுள்ளனர்.

கேசவமூர்த்தி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ள போலீஸார், தடய அறிவியல் துறை எலும்புகளை ஆய்வு செய்த பிறகே எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்ற விவரங்கள் தெரிய வரும் எனவும் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments