2008 மும்பைத் தாக்குதல் - 15வது ஆண்டு நினைவு தினம்

0 1059

மும்பைத் தாக்குதலின் 15வது ஆண்டு நிறைவு இன்று அனுசரிக்கப்படுகிறது.

மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு 10 பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல்வழியாக ஊடுருவி சத்ரபதி சிவாஜி ரயில்நிலையம், தாஜ் ஓட்டல், ஓபராய் ஓட்டல் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடத்திய தாக்குதலில் வெளிநாட்டவர் உள்பட 166 பேர் உயிரிழந்தனர்.

300 பேர் காயம் அடைந்தனர். அந்த இரவின் பயங்கரத்தை நேரில் கண்ட பலரும் இன்னும் அதன் பாதிப்பிலிருந்து விடுபடவில்லை. தமது வீட்டின் கதவைத் தட்டிய கசாப் குடிக்க தண்ணீர் கேட்டதாகவும் தண்ணீரைக் குடித்து விட்டு தனது கணவரை தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகவும் கருணா என்ற பெண் ஒருவர் நினைவுகூர்ந்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments