பல்கலைக்கழக திறந்தவெளி அரங்கில் இசை நிகழ்ச்சியின் போது நெரிசல்.... 4 மாணவர்கள் உயிரிழப்பு

0 1371

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கியூசட் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் இசை நிகழ்ச்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 4 மாணவர்கள் நசுங்கி உயிரிழந்தனர்.

மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். பல்கலைக்கழக வளாகத்தின் திறந்தவெளி அரங்கில் இசை நிகழ்ச்சி நடைபெற்ற போது திடீரென மழை பெய்தது. அதனால் மாணவர்கள் சிதறி ஓடினர்.

இதில் படிகளில் ஏறமுயன்று விழுந்தவர்கள் மீது மற்றவர்கள் மிதித்துக் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கத் தவறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments