உத்தரகாசியில் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்பதில் சிக்கல் நீடிப்பு
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கத்தின் உள்ளே 15 நாட்களாக சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்க நீண்ட நாட்கள் ஆகலாம் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய NDMA உறுப்பினர் லெப்டினன்ட் ஜெனரல் சையத் அட்டா ஹஸ்னைன், சுரங்கத்தில் துளையிடும் கருவி பழுதான நிலையில் மீண்டும் துளையிடுவதற்கான இயந்திரங்களை எடுத்துச் செல்ல இந்திய விமானப்படையின் உதவி கேட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும் செங்குத்தாக துளையிடும் போது மலையில் அதிர்வுகள் ஏற்படும் என்பதால் அந்த முறை ஆபத்தானது என்று குறிப்பிட்டார். சுரங்கத்தினுள் கடைசி 10 மீட்டர் தூரத்தை மனிதர்கள் மூலம் துளையிடும் பணிகளை மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் என வெளிநாட்டு நிபுணர் அர்னால்டு டிக்ஸ் நம்பிக்கை தெரிவித்தார்.
Comments