நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசனை... டிசம்பர் 2இல் அனைத்துக் கட்சிக் கூட்டம்?
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரை முன்னிட்டு டிசம்பர் 2ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நடப்பாண்டின் நாடாளுமன்றக் குளிர்காலத் கூட்டத்தொடர் டிசம்பர் 4ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசு தனது நிகழ்ச்சி நிரலை முன்வைப்பதற்கும், எதிர்க்கட்சிகள் விவாதிக்க வேண்டிய பிரச்சினைகளின் பட்டியலை முன்வைப்பதற்கும் வழக்கமாக கூட்டத் தொடர் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும்.
ஆனால் டிசம்பர் 3ம் தேதி ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடக்கவிருப்பதால் ஒரு நாள் முன்னதாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படும் என கூறப்படுகிறது.
Comments