ஆதித்யா எல் 1 விண்கலம் இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்

0 1448

சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலம் பயணத்தின் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டதாக இஸ்ரோ அமைப்பின் தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் விண்வெளி ஆய்வு துவங்கி 60 ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ள நிலையில், அது தொடர்பான நிகழ்வில் சோம்நாத் பங்கேற்றார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ஆதித்யா எல்-1 விண்கலம் இறுதிக்கட்ட பயணத்தில் உள்ளதாகக் குறிப்பிட்டார். 

2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 7ம் தேதி எல்-1 புள்ளியை ஆதித்யா விண்கலம் சென்றடையும் என்று தெரிவித்த சோம்நாத், அந்தப்  புள்ளியில் விண்கலம் நுழைவதற்கான கடைசி ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments