சென்னையில் 51 அரங்கங்களுடன் கலைஞர் நூற்றாண்டு விழா கண்காட்சி... நேரில் பார்வையிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்

0 1048

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கில் 51 அரங்கங்களுடன் அமைக்கப்பட்டுள்ள நிறுவனங்களின் நாயகர் கலைஞர் கண்காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.

முன்னதாக நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கருணாநிதி ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 2 நிறுவனங்களையாவது உருவாக்கியதாக கூறினார்.

1970-ஆம் ஆண்டு துவக்கப்பட்ட தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி கழகம் முதல் 2010 அண்ணா நூற்றாண்டு நூலகம் வரை 41 அரசு நிறுவங்கள் கருணாநிதி ஆட்சியில் உருவாக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

கருத்தரங்கில் பேசிய அமைச்சர் பொன்முடி, மிக பெரிய பதவியில் உள்ளவர்கள் கூட திராவிட மாடல் என்றால் என்னவென்று தெரியாமல் பேசிக்கொண்டு இருப்பதாகவும், மக்களுக்கு திராவிட மாடல் என்றால் என்ன என புரிய வைக்கும் வகையில் தான் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருவதாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments