கட்டணமில்லா பேருந்துகளில் பயணிக்கும் பெண்களிடம் புள்ளி விவரங்களை சேகரிக்க இ.பி.எஸ். கண்டனம்

0 1692

கட்டணமில்லா பேருந்துகளில் பயணிக்கும் பெண்களிடம் தேவையற்ற விபரங்கள் சேகரிப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் சில நாட்களாக கட்டணமில்லா பேருந்து பயணம் செய்யும் பெண்களிடம் பெயர், வயது, மொபைல் எண், ஜாதி போன்ற 15 விபரங்களை அப்பேருந்து நடத்துநர்கள் விசாரித்து போக்குவரத்துத் துறை படிவங்களில் நிரப்புவதாக அறிக்கை ஒன்றில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மொபைல் எண்ணை நடத்துநர்கள் வாங்கும்போது, அருகில் உள்ளவர்களும் பெண்களின் மொபைல் எண்ணைக் குறித்துக்கொள்ள வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ள இ.பி.எஸ்., ஒரு சில நடத்துநர்களோ அல்லது குறிப்பெடுத்த அருகில் உள்ளவர்களோ அப்பெண்களிடம் பேசவோ வேண்டாத படங்களை அனுப்பவோ முயற்சி செய்யும் நிலை ஏற்படலாம் என்று கூறியுள்ளார்.

இவை அனைத்தையும் விட, பெண்களிடம் நடத்துநர்கள் நீங்கள் என்ன ஜாதி என்று கேட்பது மிகுந்த கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ள இ.பி.எஸ்.,  உலகில் எங்கேயும் பேருந்து, ரயில், விமானம், கப்பலில் பயணம் செய்வோர் எவரிடமும் எந்த அரசும் இதுபோன்ற கேள்விகளைக் கேட்டதில்லை என்று குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments