சேரி என்ற சொல்லுக்கு அன்பு, அழகு என அர்த்தம்... தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக எதுவும் பேசவில்லை: குஷ்பு
விளம்பரத்துக்காக காங்கிரஸ் கட்சியினர் தம்மை எதிர்ப்பதாக நடிகை குஷ்பு கூறினார்.
சேரி மொழி என்ற தமது பதிவு குறித்து சென்னை விமான நிலையத்தில் விளக்கமளித்த அவர், தி.மு.க.வினர் பற்றிய தமது பதிவுக்கு அக்கட்சியினருக்கு பதில் காங்கிரஸ்காரர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என்று வினவினார்.
தாழ்த்தப்பட்ட மக்களை குறிப்பிட்ட தாம் பேசவில்லை என்றும் சேரி என்றால் பிரஞ்சு மொழியில் அன்பு அல்லது அழகு என்று அர்த்தம் என்றும் குஷ்பு தெரிவித்தார்.
Comments