காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் 21-வது நாளாக கையெழுத்திட்ட டி.டி.எஃப் வாசன்

0 3113

அஜாக்கிரதையாக டூவீலரை இயக்கி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் 21-வது நாளாக டி.டி.எஃப்.வாசன் காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் ஜாமீன் கையெழுத்திட்டார்.

கடைசி நாளில் கையெழுத்திட வந்த வாசனை காண்பதற்காக வந்த சில ரசிகர்கள் சாலையிலேயே வாகனத்தை நிறுத்தியதால் அவர்களை போலீஸார் விரட்டியடித்தனர்.

அப்போது, சாலையில் நிறுத்தியிருந்த காரின் பின்புறம் டூவீலர் ஒன்று மோதியது. பிறருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாகச பயணங்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்திய விவசாயி ஒருவரிடம் அங்கிருந்த இளைஞர் வாசனுக்கு ஆதரவாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஜாமீன் கையெழுத்திட வரும் போது உணவு சாப்பிட்ட சாலையோர கடை நடத்தும் பெண்ணுக்கு வாசன் நிதி உதவி அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments