அண்டார்டிகாவில் இருந்து பிரிந்த உலகின் மிகப் பெரிய பனிப்பாறை.. லண்டன் மாநகரை விட இரு மடங்கு பெரிய பனிப்பாறையால் தெற்கு ஜார்ஜியா தீவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு

0 3758

உலகிலேயே மிகப்பெரிய பனிபாறை ஒன்று அண்டார்டிகாவில் இருந்து பிரிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

A23a என்று அழைக்கப்படும் அந்த பனிப்பாறை சுமார் 4 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது என்றும் இது லண்டன் மாநகரை விட இரு மடங்கு பெரியது என்றும் கூறப்படுகிறது.

கடந்த 1986ம் ஆண்டு அண்டார்க்டிகாவில் இருந்து பிரிந்த இந்தப் பனிப்பாறை வெடல் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்தது.

தற்போது காற்று மற்றும் கடல் நீரோட்டம் காரணமாக மீண்டும் பிரிந்து அட்லாண்டிக் பெருங்கடலின் தெற்கு நோக்கி நகர்வதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் A23a பனிப்பாறை தெற்கு ஜார்ஜியா தீவு நோக்கிச் சென்றால் அங்கு வாழும் மற்ற உயிரினங்கள் பாதிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments