அதிமுக ஒரு தடுப்பணை.. திமுக ஒரு மேட்டூர் பேரணை - கவிஞர் வைரமுத்து பேச்சு
தமிழ்நாட்டிற்குள் வடக்கிலிருந்து அந்நிய சக்தி வந்து நாற்காலி போட வேண்டும் என்றால் அதிமுகவை தாண்டி தான் வர வேண்டும் அதிமுக ஒரு தடுப்பணை, திமுக ஒரு மேட்டூர் பேரணை என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள ரசிகா ரஞ்சனி சபா அரங்கத்தில் சென்னை தென்மேற்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞரோடு நான் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய வைரமுத்து, எம்.ஜி.ஆர். திராவிட கட்சியிலிருந்து விலகியது பற்றி என்றாவது வருந்தியது உண்டா..? என்று கருணாநிதியிடம் தாம் கேட்டதை நினைவுகூர்ந்தார்.
அதுவும் ஒரு வகையில் நல்லதா போச்சு ஏனென்றால் எம்ஜிஆர் இன்னொரு இயக்கம் தொடங்காவிட்டால் அந்த இடத்திற்கு அன்னிய சக்தி வந்திருக்கும் என்று அவர் பதிலளித்ததாக குறிப்பிட்டார்.
Comments