உத்தரகாசியின் சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்பதில் மீண்டும் தாமதம்..

0 1087

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியின் சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்பதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

டிரில்லிங் செய்ய கொண்டு வரப்பட்ட அமெரிக்க ஆகர் இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இன்னும் 12 மீட்டர் தூரமே டிரில்லிங் செய்ய வேண்டிய நிலையில் இரும்பு கம்பிகள் குறுக்கிட்டதால் பணிகள் நிறுத்தப்பட்டன.

இதனால் தொழிலாளர்கள் வெளியேறுவதற்காக தோண்டப்பட்ட பகுதியில் பைப்புகளை மேலும் உள்ளே செலுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. அங்குள்ள இடிபாடுகளை கைகளால் அகற்ற தொழிலாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் மீட்பு நடவடிக்கை சற்று தாமதமாகலாம் என்று கூறப்படுகிறது. இன்றுடன் 14 நாட்கள் ஆகிய நிலையில் தொழிலாளர்களின் குடும்பங்கள் கலக்கம் அடைந்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments