மும்பையில் SD கார்டுகளை திருத்தி விமான பயிற்சி மையம் மோசடி

0 1165

விபத்தில் சிக்கிய சிறு வகை விமானங்கள் இரண்டின் எஞ்சின் செயல்பாடுகள் தொடர்பான தரவுகளை பதிவு செய்யும் டிஜிட்டல் டேட்டா கார்டுகளில் சட்டவிரோதமாக திருத்தம் செய்து விசாரணை அமைப்பிடம் வழங்கியதாக பூனேவைச் சேர்ந்த விமானிகள் பயிற்சி மையம் மீது புகார் எழுந்துள்ளது.

பாராமதி விமான நிலையத்தில் செயல்பட்டு வரும் ரெட் பேர்டு என்ற அந்த பயிற்சி மையத்தை முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரின் உறவினர் நடத்தி வருகிறார்.

தற்போதைய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் அனில் கில்லின் உறவினர் நடத்தி வரும் நிறுவனத்திடம் சிறிய வகை பயிற்சி விமானங்களை லீசுக்கு எடுத்துள்ளனர்.

அந்த விமானங்களில் ஒன்று கடந்த 18-ஆம் தேதியும், அதற்கு 2 நாட்களுக்குப் பின் மேலும் ஒரு விமானமும் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

ஏன் விபத்து நடந்தது என்பதை மறைப்பதற்காக சிறு வகை விமானங்களில் கறுப்புப் பெட்டியாக கருதப்படும் டிஜிட்டல் டேட்டா கார்டுகளில் திருத்தம் செய்து வழங்கியதாக விமான விபத்துகள் விசாரணை அமைப்பு கூறியுள்ளது.

இது இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டனைக்கு உரிய குற்றம் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments