ராஜஸ்தானில் சனிக்கிழமையன்று வாக்குப்பதிவு நடைபெறும் 199 தொகுதிகளில், துணை ராணுவப்படை வீரர்கள் குவிப்பு
ராஜஸ்தானில் சனிக்கிழமையன்று வாக்குப்பதிவு நடைபெறும் 199 தொகுதிகளில், துணை ராணுவப்படை வீரர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே முக்கிய போட்டி நிலவினாலும், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகளும் களத்தில் உள்ளன.
5 கோடியே 25 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில், அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று அம்மாநிலத்தை சேர்ந்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டுக்கொண்டார்.
மொத்தமுள்ள 200 தொகுதிகளில் ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணம் அடைந்ததால் தேர்தல் நடைபெறும் 199 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
26 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்தி வாக்குப்பதிவை கண்காணிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
Comments