சீனாவில் சுவாசக் கோளாறு பிரச்சனைகள் அதிகரித்து வருவது தொடர்பான விவரங்களை கேட்கும் உலக சுகாதார அமைப்பு
சீனாவில் சுவாசக் கோளாறு பிரச்சனைகள் அதிகரித்து வருவது தொடர்பான விவரங்களை உலக சுகாதார அமைப்பு கேட்டுள்ளது.
வடக்கு சீனாவில் நிமோனியா மற்றும் பறவை காய்ச்சல் அறிகுறிகளுடன் ஏராளமான குழந்தைகள் மருத்துமனைகளில் குவிந்தனர்.
இது தொடர்பான செய்திகள் வெளியானதும் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்திய பிறகே இப்பிரச்சனை எழுந்ததாக சீன அரசு விளக்கம் அளித்தது.
இதனிடையே, 2019 ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் தற்போது உள்ள சூழல் போன்றே சீனாவில் ஏராளமான குழந்தைகள் மருத்துவமனைகளில் குவிந்ததாக கூறப்படுகிறது.
2020 ஆம் ஆண்டு ஜனவரியில் கொரோனா பரவல் தொடங்குவதற்கு முன்பு இருந்தது போன்ற சூழல், சீனாவில் மீண்டும் ஏற்பட்டுள்ளதால் மருத்துவ நிபுணர்கள் கவலை அடைந்துள்ளனர்.
Comments