வடகொரியா உளவு செயற்கைக்கோளை ஏவியதற்கு உலக நாடுகள் கண்டனம்
வடகொரிய விஞ்ஞானிகள் விண்ணில் ஏவிய உளவு செயற்கைக்கோளின் உதவியுடன் உலகின் எந்தப் பகுதி மீதும் தங்களால் தாக்குதல் நடத்த முடியும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
ஏவுகணை தாக்குதல் நடத்த செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தக்கூடாது என ஐ.நா.,வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வடகொரியா மீறி விட்டதாக உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
மறுபுறம், உளவு செயற்கைக்கோள் திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகள் உள்ளிட்டவர்களுக்கு அரசு சார்பில் விருந்து கொடுத்து வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பாராட்டியுள்ளார்.
Comments