ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி.. சூர்யகுமார் யாதவ் 80 ரன்களும், இஷான் கிஷான் 58 ரன்களும் குவிப்பு..!!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் வீரர் ஜோஸ்இங்கிலிஸ் 50 பந்துகளில் 110 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
பின்னர் ஆடிய இந்திய அணி 19 புள்ளி 5 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்திய தரப்பில் சூர்யகுமார் யாதவ் 80 ரன்களும், இஷான் கிஷான் 58 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
Comments