26 வயசு தான் இப்படியா ? ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி.. பலியான பெண் மருத்துவர்..! உடல் எடையை குறைக்க முயற்சி
சென்னை கீழ்ப்பாக்கம் ஜிம் ஒன்றில் உடல் எடையை குறைக்க தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்ட 26 வயது பெண் டாக்டர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உடல் எடை குறைப்புக்காக ஜிம்மில் தீவிர பயிற்சி மேற்கொண்ட போது உயிரிழந்ததாகக் கூறப்படும் 26 வயது பெண் மருத்துவர் அன்விதா இவர் தான்..!
சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ் முடித்தவர் மருத்துவர் அன்விதா. பிரபல கண்மருத்துவரின் மகளான அன்விதா புதன்கிழமை இரவு கீழ்பாக்கம் நியூ ஆவடி சாலையில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றுள்ளார்.
உடற்பயிற்சியை தொடங்கிய பத்து நிமிடத்தில் திடீரென மயங்கி சரிந்துள்ளார். அவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டிருக்கலாம் என்று நினைத்து மயங்கி விழுந்தவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தப்போது அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் , அன்விதா மாரடைப்பு காரணமாக உயிர் இழந்து விட்டதாக தெரிவித்தது உறவினர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
26 வயதான அன்விதா, நடுத்தர உடல்வாகுடன் இருந்தாலும், மேலும் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக கடந்த சில மாதங்களாக கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஜிம்மில் பயிற்சி மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகின்றது.
மருத்துவர் அன்விதா மயங்கி விழுந்த பின் அருகில் இருந்தவர்கள் முதலுதவி அளித்து, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அங்கு சிகிச்சை அளித்த போது தீவிர மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
26 வயது பெண் மருத்துவர் மாரடைப்பில் பலியானதால், முதலில் காவல்துறைக்கு முறையான தகவல் தெரிவிக்காமலும், பிண்கூறாய்வு ஏதும் நடத்தப்படாமலும் அவரது சடலம் அடக்கம் செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அவரது தந்தையிடம் போலீசார் விசாரித்தனர்.
தந்தையும் மருத்துவர் என்பதால், மகளின் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என்று தெரிவித்ததோடு, தீவிர உடற்பயிற்சியால் ஏற்படும் மாரடைப்பு குறித்த அறிவியல் உண்மையை அறிந்து, தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இல்லை என்று போலீசாரிடம் அவர் தெரிவித்துள்ளார்.
முறையான உடற்பயிற்சி நீண்ட ஆயுளை கொடுக்கும் என்று கூறப்படும் நிலையில், உடல் எடையை குறைப்பதற்காக உடற்பயிற்சி கூடத்துக்கு சென்ற இளம் பெண் மருத்துவர் பயிற்சியின் போது மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Comments