"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
உலகின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நாடு இந்தியா - ஆளுநர் ஆர்.என்.ரவி
உலகின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நாடாக இந்தியா உருவெடுத்திருப்தாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
உலக தலைவர்கள் கலந்து கொண்டு ஜி20 மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த விளக்க கருத்தரங்கம் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கிற்கு தலைமை வகித்து உரையாற்றிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ,உலகில் போரை விட ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் வறுமை காரணமாக ஏராளமான பெண்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றார்.
இதுபோன்ற உலகின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாகவும் கூறினார்.
கொரோனா காலத்தில் இந்தியாவில் 80 மில்லியன் மக்கள் உயிரிழப்பார்கள் என உலக நாடுகள் கணித்ததாகவும், ஆனால் கொரோனாவில் இருந்து விரைவாக மீண்ட நாடாக இந்தியா உருவெடுத்ததாகவும் ஆளுநர் தெரிவித்தார்.
Comments