நடிகர் பிரகாஷ் ராஜ்க்கு அமலாக்கத்துறை சம்மன்.. மோசடி வழக்கில் சிக்கிய நகை நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்ததால் நடவடிக்கை

0 2009

பிரபல திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ், பணமோசடி வழக்கில் சிக்கிய நகை நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்ததால் அடுத்த மாதம் 5-ம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

திருச்சியை தலைமையிடமாக கொண்டு பல்வேறு இடங்களில் இயங்கி வந்த பிரணவ் ஜுவல்லரி என்ற நிறுவனம் நகை சீட்டு கட்டிய மக்களின் பணம் 100 கோடி ரூபாயை மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்த நிலையில், அனைத்து நகை கடைகளும் மூடப்பட்டு அதன் உரிமையாளர்கள் தலைமறைவாகினர்.

சில நாட்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் பிரணவ் ஜூவல்லர்ஸ் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் இந்நிறுவனம் பொதுமக்களின் பணத்தை மோசடி செய்திருப்பதும், அந்தப் பணத்தில் போலி நிறுவனங்களில் முதலீடு செய்து கணக்கு காட்டி இருப்பதும் தெரிய வந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments