கடலூரில் துப்புரவு பணியாளர்களை சந்தித்து பேசிய மாவட்ட ஆட்சியர் முறையாக குப்பைகளை அகற்றவேண்டும் என உத்தரவு
வீடு வீடாகச் சென்று குப்பைகளை சேகரிக்க வேண்டும், வீதிகளில் உள்ள குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் என துப்புரவு பணியாளர்களுக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் மாநகராட்சியில் துப்புரவு பணிகள் முறையாக நடப்பதில்லை என கவுன்சிலர்கள் புகார் தெரிவித்த நிலையில், மஞ்சை நகர் மைதானத்தில் அனைத்து துப்புரவு பணியாளர்களை வரவழைத்து பேசிய ஆட்சியர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் சொல்வதைக்கேட்டு செயலாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
330 துப்புரவு பணியாளர்களில் 250 பேர் மட்டுமே வந்திருந்ததாலும், பல துப்புரவு வாகனங்கள் பழுதடைந்த நிலையில் இருந்ததைக்கண்டும் அதிர்ச்சி அடைத்த மாவட்ட ஆட்சியர், அவற்றை உடனடியாக பழுது நீக்கி தருவதற்கான ஏற்பாடுகள் செய்ய உத்தரவிட்டார்.
Comments