உத்தரகாண்ட் சுரங்கப் பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களுடன் வாக்கிடாக்கி மூலம் பேசிய முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி
உத்தரகாண்ட் சுரங்கத்துக்குள் 12 நாட்களாக சிக்கியுள்ள 41 தொழிலாளர்களுடன் அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, வாக்கி டாக்கி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
உணவுப் பொருட்களை அனுப்பும் குழாய்கள் மூலம் தொழிலாளர்களுக்கு வாக்கி டாக்கி கருவி அனுப்பி வைக்கப்பட்டது. அதில் பேசிய முதலமைச்சர் தாமி, காலைக்குள் மீட்கப்படுவார்கள் என்று தொழிலாளர்களிடம் உறுதியளித்தார்.
மீட்கப்படுபவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக 41 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவுகளில் மருத்துவர்களும் தயார் நிலையில் உள்ளனர். இதனிடையே, விபத்து நடந்த பகுதிக்கு அருகே இருந்த சாமி சிலை ஒன்று, சுரங்கப்பாதை அமைப்பதற்கு அசவுகரியமாக இருப்பதாகக் கூறி சில நாட்களுக்கு முன் அகற்றப்பட்டு இருந்தது.
சிலை அகற்றப்பட்டதால் தான் விபத்து நடந்ததாக உள்ளூர்வாசிகள் கூறியதை அடுத்து, அந்த சாமி சிலை ஏற்கனவே இருந்த இடத்தில் மீண்டும் கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளது.
Comments