ஆடிகார் மூலம் ஆந்திராவுக்கு சென்று கஞ்சா கடத்தி வந்து விற்ற இளைஞர் கைது

0 1563

ஆந்திராவுக்கு சென்று ஆடி கார் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து  கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தலைமைச் செயலக காலனி காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான மொக்க கத்தி பிரகாஷ் என்பவரின் மகன் பிரபு .இவர் கஞ்சா பயன்படுத்துவதை தெரிந்த போலீசார்  காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கேளம்பாக்கம் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் கோகுல கண்ணன் என்பவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக  கூறியுள்ளார்.

இதனையடுத்து அயனாவரம் தனிப்படை போலீசார் கோகுல கண்ணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.   Whatsapp மற்றும் டெலிகிராம் ஆகிய சமூக வலைதளங்கள் மூலமாக அடிக்கடி கஞ்சா வாங்கும் கல்லூரி மாணவர்களை இணைத்து குரூப் அமைத்து செயல்பட்டு வந்ததாகவும் கூறியுள்ளார் . 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments