விசாகப்பட்டினத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக சாலையைக் கடக்க முயன்ற ஆட்டோ, லாரி மீது மோதி விபத்து

0 3138

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக சாலையைக் கடக்க முயன்ற ஆட்டோ மீது லாரி மோதியதில் 8 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

பெத்தானி என்ற தனியார் பள்ளியைச் சேர்ந்த குழந்தைகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று அதிவேகமாகச் சென்றுள்ளது. சங்கம் சரத் என்ற திரையரங்கம் அருகே உள்ள நான்குமுனை சந்திப்பில் லாரி ஒன்று வந்துகொண்டிருப்பதைக் கண்ட ஆட்டோ ஓட்டுநர், வேகமாக சாலையைக் கடக்க முயன்றுள்ளார்.

அதற்குள் லாரி அருகில் வந்துவிடவே, பதற்றத்தில் ஆட்டோ ஓட்டுநர் பிரேக் அடித்துள்ளார். இதில் நிலை தடுமாறிய ஆட்டோ மீது லாரி உரசியதில் ஆட்டோ தலைக்குப்புற கவிழ்ந்தது. ஆட்டோவிலிருந்த பள்ளி மாணவர்கள் 8 பேர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். விபத்தில் காயமடைந்த குழந்தைகள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்களில் இரண்டு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments