போரினால் பாதிக்கப்பட்ட இஸ்ரேல் மற்றும் காசா மருத்துவமனைகளுக்கு நன்கொடை வழங்க எலான் மஸ்க் முடிவு

0 2035

எக்ஸ் வலைதளத்தில் விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாயை போரினால் பாதிக்கப்பட்ட இஸ்ரேல் மற்றும் காசா மருத்துவமனைகளுக்கு நன்கொடையாக வழங்க உள்ளதாக எலான் மஸ்க் கூறியுள்ளார்.

போர் தொடர்பாக வரும் விளம்பரங்கள் மற்றும் சந்தாக்கள் மூலம் கிடைக்கும் அனைத்து வருவாயையும் இஸ்ரேலில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் காசாவின் செஞ்சிலுவை சங்கங்களுக்கு நிதியாக வழங்கப்போவதாக எலான் மஸ்க் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளார்.

நன்கொடை எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதையும் அங்குள்ள செஞ்சிலுவைச் சங்கங்கள் மூலம் கண்காணிக்கப்போவதாக பயனர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments