நீலகிரி 15 வயது சிறுமிக்கு கைவிலங்கிட்டதாக மகளிர் போலீஸார்... சி.சி.டி.வி ஆதாரங்களுடன் மாவட்ட எஸ்.பியிடம் புகார்

0 2830

உதகையில் இளைஞன் ஒருவன் மீது பாலியல் புகார் கொடுத்த பெற்றோரை இழந்த 15 வயது சிறுமியை கை விலங்கு மாட்டி வாக்குமூலம் பெற போலீசார் அழைத்துச் சென்றதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கோத்தகிரி பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் உள்ள நீதிமன்றத்திற்கு அந்தச் சிறுமியை அழைத்துச் சென்ற சி.சி.டி.வி. காட்சிகளை சமூக ஆர்வலர்கள் சிலர் கைப்பற்றி இருப்பதாகவும், அவற்றின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் சிறுமியின் உறுவினர்கள் கூறியுள்ளனர்.

அதீதமான சூழலில் மட்டுமே குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு கைவிலங்கு இடலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், புகார் கொடுத்தவருக்கே விலங்கிட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments