புகழ்மிக்க அடையாறு கேட் (கிரௌன் பிளாசா) நட்சத்திர விடுதி டிசம்பர் 20 முதல் மூடப்படும் என அறிவிப்பு

0 3829

சென்னை ஆழ்வார்பேட்டை சேமியர்ஸ் சாலையில் அமைந்துள்ள பழம்பெருமை வாய்ந்த கிரௌன் பிளாசா என்ற ஐந்து நட்சத்திர விடுதி விரைவில் மூடப்படுகிறது.

இங்கு சொகுசு மிக்க இரட்டை கோபுர குடியிருப்பு வளாகம் உருவாவதற்கு இடமளித்து மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

287 அறைகள் கொண்ட கிரௌன் பிளாசா சென்னையின் புகழ்மிக்க ஐந்து நட்சத்திர விடுதிகளில் ஒன்றாகும்.

அடையார் கேட் என்ற பெயரில் அது அழைக்கப்பட்டது. டிசம்பர் 20 முதல் விருந்தினர்களுக்கான கதவுகள் அடைக்கப்படுகின்றன.

இந்த நட்சத்திர விடுதியின் வாடிக்கையாளர்கள் உணர்ச்சிகரமாக தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments